ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!


ஜீவன்- ஜோதி தம்பதி

பெங்களூருவில் அரைகுறை உடை அணிவதைக் கண்டித்தும் அதைக் கண்டு கொள்ளாத காதல் மனைவியை கத்தியால் கழுத்தை அறுத்து கணவர் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹாசன் மாவட்டம்

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா ராம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவன் (25). இவர் அரிசிகேரேயில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

அங்கு ஜோதி (22) என்ற இளம்பெண்ணும் பணியாற்றி வந்தார். அப்போது ஜீவனுக்கும், அவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

தகராறு

இந்த நிலையில் ஜோதி மார்டனாக அரைகுறை உடை அணிந்ததாக கூறப்படுகிறது. தங்களது மருமகள் இப்படி உடை அணிகிறாரே என ஜீவனின் பெற்றோர், மகனிடம் குறை கூறியுள்ளனர். இதைடுத்து ஜோதியிடம் இப்படி உடல் பாகங்கள் தெரியும்படி அரைகுறையாக உடை அணியாதே என்று ஜீவன் கூறியுள்ளார்.

ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் ஜோதி, அரைகுறையாகவே உடை அணிந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஜோதி வெளியே செல்லும் போது அரைகுறை உடை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த ஜீவன், தனது மனைவி ஜோதியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் இதை ஜோதி கேட்கவில்லை.

இதையடுத்து ஜோதியை தனது பைக்கில் அழைத்துச் சென்று விடுவதாக ஜீவன் அழைத்துச் சென்றுள்ளார். இதை நம்பி பைக்கில் ஜோதி சென்றுள்ளார்.

கொலை

ஆனால்,ஜோதியை அங்குள்ள வனப்பகுதிக்கு பைக்கில் ஜீவன் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜோதியை அவர் தாக்கியுள்ளார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதியின் கழுத்தை அறுத்தார். இதில் சம்பவ இடத்திலேயே ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அங்கிருந்து ஜீவன் தப்பியோடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அரிசிகெரே புறநகர் போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சென்று ஜோதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அரைகுறையாக ஆடை அணிந்ததால் அந்த ஆத்திரத்தில் காதல் ஜோதியை, அவரது கணவர் ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஜீவனை தேடி வருகின்றனர்.

திருமணமான ஆறே மாதங்களில் காதல் மனைவியை கணவன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த சம்பவம், ஹாசன் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x