மாணவியிடம் தவறாக நடக்க முயன்ற பள்ளி முதல்வர் கைது!


உத்திர பிரதேசத்தில் உள்ள பள்ளி ஒன்றின் முதல்வர், 5-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்ததில், அவரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசம் அயோத்தியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, குறிப்பிட்ட மாணவியை மட்டும் தனது அறைக்கு வருமாறு பள்ளியின் முதல்வர் அழைத்துள்ளார். அதற்கு அந்த மாணவி மறுக்கவே அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

இங்கு நடந்தை பெற்றோர் உள்ளிட்ட யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன அந்த சிறுமி பள்ளிக்கு வருவதை நிறுத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை அழைத்து கேட்டப்போது நடந்தவற்றைக் கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளி முதல்வர் ரிஸ்வான் அகமது மீது பெற்றோர் போலீஸில் புகார் அளித்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் வாசிக்கலாமே...

x