சென்னையில் மின்கசிவு காரணமாக ஏ.சி இயந்திரம் தீப்பிடித்ததால் ஏற்பட்ட புகையால் தாய், மகள், மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் மேனாம்பேடு ஏகாம்பரம் நகர் கைலாசம் தெருவைச் சேர்ந்தவர் ஐக்ஹைலா(50). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் ரஹ்மத் உடல் நலக்குறைவால் காலமானார். இதனால் ஹைலா அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து குடும்பத்தை கவனித்து வந்தார்.
இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி தனது கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இளைய மகள் நஸ்ரின்(16) அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று இரவு தாய், மகள் இருவரும் வழக்கம் போல் வேலை முடிந்து இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று காலை இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று கதவை தட்டினர். அப்போது கதவு உள்பக்கம் தாழ் போட்டிருந்ததால் உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதன் பேரில் அங்கு வந்த அம்பத்தூர் போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாயும், மகளும் மெத்தையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்த நிலையில் கிடந்தனர். இருவரது உடலை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக ஏ.சி இயந்திரம் தீப்பிடித்து எரிந்து ஏற்பட்ட புகையால் தூங்கிக் கொண்டிருந்த தாய், மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏ.சி இயந்திரம் தீப்பிடித்து எரிந்து ஏற்பட்டு புகையால் தாய்,மகள், மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மகாளய பட்சம் : இன்று முதல் அடுத்த 15 நாட்களை மிஸ் பண்ணாதீங்க... பித்ரு தோஷம் நீங்க சிறந்த வழிபாடு!
புரட்டாசி சனிக்கிழமை: பெருமாளை இப்படி தரிசித்தால் தரித்திரம் விலகும்’; செல்வம் சேரும்!
நாளை தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்!
சென்னையில் அதிர்ச்சி... பெட்ரோல் பங்க் மேற்கூரை விழுந்து ஒருவர் உயிரிழப்பு!
காதல் கணவர் வேண்டும்! வீட்டின் முன்பு 35 நாட்களாக மனைவி தர்ணா!