பரபரப்பு... விமானம் வெடித்து சிதறும்! மிரட்டலால் சென்னை விமான நிலையத்தில் அலர்ட்


ஆகாசா ஏர் விமானம் (கோப்பு படம்)

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆகாசா நிறுவனத்தின் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

சமீபத்தில் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட ஆகாசா ஏர்லைன்ஸ் நிறுவனம், துவங்கிய சில நாட்களிலேயே நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களால் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. இதையடுத்து, அந்நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்கள், பன்னாட்டு விமான நிலையங்களின் ஹேங்கர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்ற ஒரு விமானம், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்

இந்நிலையில், எக்ஸ் தளத்தில் ஆகாசா விமான நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டிருந்த மர்ம நபர் ஒருவர், ஆகாசா விமானம் வெடித்து சிதறும் என மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விமானத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை என்ற போதும், விமான நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. இந்த வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டது யார்? முன்னாள் ஊழியர்கள் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டார்களா? பயணிகள் யாரேனும் இதை செய்தார்களா என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

x