பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு


பாஜக

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைவரை கிளர்ச்சியாளர்கள் கடத்திச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் லாங்டிங் மாவட்டத்தில், பாஜக தலைவர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அருணாச்சல் கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஒரு நபர், சமூக விரோத சக்திகள் துணை கொண்டு இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த கடத்தல் சம்பவத்தை அம்மாநில சட்டம், ஒழுங்கு ஐஜி- சுக்கு அபா உறுதி செய்துள்ளார். நேற்று இது தொடர்பாக பேசிய அவர், "கடத்தப்பட்ட நபரை மீட்க போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

அருணாச்சல் தலைமைத் தேர்தல் அதிகாரி பவன்குமார் சைன்

ஆனால் கட்டத்தப்பட்ட பாஜக தலைவரின் பெயர் மற்றும் கடத்தலுக்கான காரணம் போன்ற எந்த கூடுதல் விவரங்களையும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

தேர்தல் சமயத்தில் பாஜக தலைவர் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பவன்குமார் சைன் கூறுகையில், "தேர்தல் செயல்பாட்டில் சமூகவிரோத சக்திகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள முடியாது. இத்தகைய செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய ஆயுத காவல் சிறப்பு படைப்பிரிவினர் லாங்டிங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநிலத்தில் அமைதியான வாக்குப்பதிவை நடத்துவதற்காக சிஏபிஎஃப் மற்றும் மாநில காவல்துறையினர் சுமார் 13,176 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

கடத்தல்

அருணாச்சலப் பிரதேசத்தில் 2 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 60 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏற்கெனவே பாஜக போட்டியிடன்றி வெற்றி பெற்றுள்ளது.

அருணாச்சலில் திராப், சாங்லாங், லாங்டிங் ஆகிய மூன்று கிழக்கு மாவட்டங்களில் நாகா கிளர்ச்சியாளர்களின் செயல்பாடு தீவிரமாக உள்ளது. இவர்கள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் பிற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

அருணாச்சலப் பிரதேசம்

கடந்த சில ஆண்டுகளில், இப்பகுதியில் பல்வேறு கிளர்ச்சிக் குழுக்களின் பல தலைவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அருணாச்சலில் மொத்தம் 2,226 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 228 வாக்குச் சாவடிகளுக்கு நடந்து மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

x