பேரையூர் அருகே ரேஷன் அரிசி கடத்திய 3 இளைஞர்கள் கைது


மதுரை: மதுரை மாவட்டம், பேரையூர் அருகே 1,240 கிலோ ரேஷன் அரிசியை வெளிமாவட்டங்களுக்கு கடத்த முயற்சித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் பேரையூர் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பேரையூர் மாரியப்பா காம்பிளக்ஸ் முன்பாக சந்தேகப்படும்படியாக சென்ற நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தலா 40 கிலோ எடை கொண்ட 31 வெள்ளை நிற பாலித்தீன் சாக்குகளில் மொத்தம் சுமார் 1,240 கிலோ ரேசன் புழுங்கல் அரிசி மூட்டைகள் இருந்தன. அவற்றை வெளி மாவட்டங்களுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இது தொடர்பாக வாகன உரிமையாளர் மூர்த்தி (21), ஓட்டுநர் அபினேஷ் (21) மற்றும் மதுரை முனிச்சாலை பகுதியைச் சேர்ந்த லோடுமேன் சுரேஷ் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். வாகனம் மற்றும் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

x