ஒருதலைக்காதலால் நேரிலும், செல்போனும் தொடர்ந்து வாலிபர் டார்ச்சர் செய்ததால் மனமுடைந்த 16 வயது மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கொப்பல் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இந்த மாணவியை அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தம் என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அத்துடன் அந்த மாணவியிடம், தான் காதலை பலமுறை கூறியுள்ளார். ஆனால், அந்த மாணவி, அவரது காதலை ஏற்கவில்லை. ஆனாலும், அந்த மாணவியைத் தொடர்ந்து புருஷோத்தம் காதல் டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
அத்துடன் மாணவியின் செல்போன் எண்ணுக்கு பல்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டு புருஷோத்தம் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், அவரை மாணவி நேரடியாகக் கண்டித்துள்ளார்.ஆனாலும், தொடர்ந்து மாணவிக்கு புருஷோத்தம் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அந்த மாணவி, மனமுடைந்து காணப்பட்டார் இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணாவி விஷம் குடித்து நேற்று தற்கொலை செய்து கொண்டார். கடைக்குச் சென்றிருந்த பெற்றோர், திரும்பி வந்து பார்த்த போது அவர்களது மகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேவூரு போலீஸார், விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், மாணவியின் தற்கொலைக்குக் காரணமானவர் மிது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் பேவூரு காவல் நிலையம் முன்பு திடீரென முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவியின் தற்கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் கொடுத்த டார்ச்சரால் மாணவி மனமுடைந்த தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.