கர்நாடகாவில் டிப்பர் லாரி ஒன்று சாலை விபத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மணலில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் பகுதியை சேர்ந்தவர் விவசாயி யங்கப்பா (70). இவரது மனைவி யல்லவா (65). இவர்களுக்கு பந்தலேகா (35), நகவா (45) என்ற மகன், மகள் உள்ளனர். நகவா அசோகா (50) என்பவரது மனைவி ஆவார். இவர்கள் அனைவரும் யங்கப்பாவுக்கு சொந்தமான வயலில் நேற்று பணியாற்றிக் கொண்டிருந்தனர். பணி முடிந்து மாலை 5 பேரும் வீட்டிற்கு செல்வதற்காக நெடுஞ்சாலையை கடக்க காத்திருந்தனர்.
சாலையோரமாக 5 பேரும் நின்று கொண்டிருந்த போது, அவ்வழியே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்றின் பின்பக்க டயர் வெடித்து விபத்திற்கு உள்ளானது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதனால் டிப்பர் லாரியில் இருந்த மணல் மொத்தமும் சாலையோரம் நின்றிருந்த யங்கப்பா குடும்பத்தினர் மீது விழுந்து மூடியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்க முயற்சித்த போதும், லாரி மேலே விழுந்திருந்ததால் அவர்களால் மீட்க முடியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிரேன் உதவியுடன் லாரியை மீட்டனர். தொடர்ந்து மணலுக்குள் புதைந்திருந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் 5 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!
கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!
என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!