பல்லடத்தை பதற வைத்த 4 பேர் கொலை வழக்கு... குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்!


கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3-ம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி (67), சின்னம்மா ரத்தினம்மாள் (58), பெரியப்பா மகன் செந்தில்குமார் (47) ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்டவர்கள்

இந்த வழக்கில் செல்லமுத்து (24), ஐயப்பன் (52), வெங்கடேஷ் (எ) ராஜ்குமார் (27), சோனை முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான் வெங்கடேஷ் என்ற ராஜ்குமார் விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்றதாக காவல் துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்டார்.

சுடப்பட்ட வெங்கடேன் என்ற ராஜ்குமார்

இவர்களுக்கு உதவிய செல்வம் (எ) வெங்கடேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில், வெங்கடேஷ் (எ) ராஜ்குமார், ஐயப்பன், செல்லமுத்து, சோனை முத்தையா ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.

x