தொட்ட இடமெல்லாம் கொட்டும் கோடிகள்... கோழித் தீவன நிறுவனத்தில் 3- வது நாளாக சோதனை!


பொள்ளாச்சி எம்.பி.எஸ். ஹேச்சரீஸ்

பொள்ளாச்சியில் தனியார் கோழித் தீவன நிறுவன உரிமையாளர்களின் அலுவலகத்தில் 3-வது நாளாக நடத்தப்பட்டு வரும் வருமானவரித்துறை சோதனையில், இதுவரை 90 கோடி ரூபாய் அளவுக்கு பணம் மற்றும் நகைகள் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தலில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்குவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதே போல் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட தேசிய புலனாய்வு அமைப்புகளும் பல்வேறு சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

பொள்ளாச்சி எம்.பி.எஸ். ஹேச்சரீஸ்

இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் எம்.பி.எஸ் ஹேச்சரீஸ் நிறுவனத்தில் கடந்த 3 நாட்களாக வருமானவரித் துறையினர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சுமார் 32 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அந்நிறுவனத்திற்கு சொந்தமான பிற இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனையை தீவிரப்படுத்தினர்.

கோவை, உடுமலை, பொள்ளாச்சி, கோமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்படும் பணம்

இந்த சோதனைகளில் இதுவரை 90 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் கோழித் தீவன நிறுவனத்தில் நடத்தப்பட்ட இந்தச் சோதனைகளில் கோடிக்கணக்கில் ரொக்கம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டிருப்பது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x