மாணவிகள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கலபுரகி மாவட்டம் ஜேவர்கி நகர் சாந்தநகரில் சிறுபான்மையினர் மாணவி விடுதி உள்ளது. இந்த விடுதியில் தங்கியுள்ள ஒரு மாணவியின் நண்பரான கடை வைத்துள்ள சலீம் என்பவர் விடுதிக்கு சென்று வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு மாணவி குளியலைக்கு குளிக்கச் சென்றார். அப்போது ரகசிய கேமரா அங்கு பொருத்தப்பட்டதைப் பார்த்து அதிர்சியடைந்தார். இதனால் அவர் சத்தம் போடவும், மற்ற மாணவிகள் சலீமை சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அவரை மாணவிகள் சரமாரியாக தாக்கினர்.
அப்போது அப்பகுதி மக்கள் தலையிட்டு சலீமை விடுவித்தனர். இதனால், அங்கிருந்து சலீம் தப்பிச் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் சிலர், தாசில்தார் மற்றும் போலீஸாருக்குத் தகல் தெரிவித்தனர். இதுகுறித்து அஙகு வந்த போலீஸார், குளியலறையில் இருந்த ரகசிய கேமராவை கைப்பற்றினர்.
அத்துடன் சலீம் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் சலீம் இருந்த இடத்திற்கு போலீஸாரை அழைத்துச் சென்றனர். அங்கிருந்த சலீமை, ஜேவர்கி போலீஸார் இன்று கைது செய்தனர். அவர் மாணவிகள் விடுதியில் கேமரா வைத்தது முதல் முறையா அல்லது இதற்கு முன்பு வைத்துள்ளாரா? விடுதி தவிர்த்து வேறு எங்காவது ரகசிய கேமரா வைத்தாரா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த் சம்பவம் ஜேவர்கி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!
2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!
கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற இளம்பெண்!
அதிர்ச்சி... கொசுமருந்தை குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
குட் நியூஸ்... அரிசி விலை குறையப்போகிறது; மத்திய அரசின் ஏற்பாடுகள் தீவிரம்!