சிக்மகளூருவில் பள்ளி சென்று கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், சிக்மகளூருவில் உள்ள தாரதஹள்ளி ஆரம்பப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்தவர் ஹத்தாத்(13). இவர் மூடூகெரே மாவட்டம், தாரதஹள்ளியைச் சேர்ந்த அந்த சிறுமி இன்று காலை பள்ளிக்குச் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அவரை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தாரதஹள்ளி ஆரம்ப சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு மருத்துவர் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மாணவி ஹத்தாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இருந்திருந்தால், மாணவியின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று சிறுமியின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுக் கதறினர்.
மாரடைப்பால் 7-ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார் சனிபகவான்... திருநள்ளாறில் குவிந்த பக்தர்கள்!
2023 Rewind | மனதை உலுக்கிய மரணங்கள்... மீளா துயரில் ஆழ்த்திய பிரபலங்கள்!