கோவையில் சிகிச்சை பெற்றுவரும் ஹரியானா கொள்ளையனிடம் நீதிபதி வாக்குமூலம் பதிவு


கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளை யனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வந்த குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி | படம் : ஜெ.மனோகரன்

கோவை: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையனிடம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி வாக்குமூலம் பெற்றார்.

கேரள மாநிலம் திருச்சூரில் தொடர்ச்சியாக மூன்று ஏ.டி.எம்-களில் பணம் கொள்ளையடித்துவிட்டு கன்டெய்னரில் தப்ப முயன்ற ஹரியானாவைச் சேர்ந்த கொள்ளையன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீஸார் சுட்டதில் உயிரிழந்தார். மேலும், ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

இதில் அஜார் அலி (30) காலில் குண்டு காயத்துடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே, அஜார் அலியிடம் விசாரணை மேற்கொள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடுவர் நீதிமன்ற நீதிபதி மாலதி நேற்று மாலை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார்.

காவல்துறை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 4 மணி நேரமாக அஜார் அலியிடம் மொழி பெயர்ப்பாளர் மூலம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்தார்.

x