போரூர் அருகே ஆட்டோவில் சாகசம் நிகழ்த்திய ஓட்டுநர் கைது


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், போரூர் பகுதியில் ஆட்டோவில் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக ஒருவர் சாகசம் செய்ததாக சமூக வளைதளங்களிலும், செய்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.

இது தொடர்பாக, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த 19-ம் தேதி பூந்தமல்லியில் இருந்து போரூர் செல்லும் சாலையில் அய்யப்பன்தாங்கல் பஸ் டிப்போ அருகில் வேலு மற்றும் அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஆட்டோவில் சாகசத்தில் ஈடுப்பட்டது தெரியவந்தது.

இதனைடுத்து பொது இடத்தில் அதிவேகமாகவும், ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும், பாதுகாப்பற்ற முறையில் முரட்டுத்தனமாக ஆட்டோ ஓட்டி சாகசத்தில் ஈடுபட்டதாக வேலுவை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும், சாகசத்தில் ஈடுபட்ட வேலுவின் நண்பர்களை தேடி வருகின்றனர்.

x