ஷாக்... இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை: விடுதிக்கு அழைத்து வந்த வாலிபருக்கு வலை!


விடுதியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்

ஷிமோகாவில் உள்ள ஒரு விடுதியில் இளம்பெண் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், ஷிமோகாவில் தீர்த்தஹள்ளியில் உள்ள மஹாங்கரேட்கட்டேயில் சௌடேஸ்வரி கோயிலுக்கு அடுத்து ஒரு விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த 1-ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபரும், 20 வயதுடைய இளம்பெண்ணும் வந்தனர். அவர்கள் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அத்துடன் அவ்வப்போது இருவரும் விடுதிக்கு வெளியே சென்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை முதல் இரவு வரை அவர்கள் இருவரும் விடுதியை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அந்த அறைக்குள் சென்று பார்த்த போது அதிர்ந்து போனார்கள். அங்கு இளம்பெண் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவருடன் இருந்த வாலிபரை காணவில்லை. இதனால் உடனடியாக விடுதி ஊழியர்கள். தீர்த்தஹள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விடுதிக்கு விரைந்து வந்த போலீஸார், இளம்பெண் கொலை செய்யப்பட்ட அறையில் சோதனை நடத்தினர். அத்துடன் இளம்பெண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்டவர் யார், கொலை செய்தவர் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை விடுதிக்கு அழைத்து வந்து கழுத்தை அறுத்து வாலிபர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

x