புதுவீட்டில் குடியேறிய 10 நாட்களில் தம்பதி தற்கொலை... கரூர் அருகே சோகம்!


தற்கொலை செய்து கொண்ட தம்பதி

அரவக்குறிச்சி அருகே பெற்ற குழந்தைகளைத் தவிக்க விட்டு தாய், தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கல்வார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(35). இவரது மனைவி ஜெயா (30). இந்த தம்பதியருக்கு 11 வயதில் மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரை காலி செய்துவிட்டு, கரூரை அடுத்த பஞ்சமாதேவி கிராமத்தில் புதிதாக வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். பள்ளி முடிந்து முதலில் மகன் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

போலீஸ் விசாரணை

இதையடுத்து, அவர் நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். ஆனால், வீடு திறக்கப்படவில்லை. இதையடுத்து, அருகில் உள்ளவர்களை அழைத்து விவரத்தை கூறியுள்ளார். விரைந்து வந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, வீட்டு தாழ்வாரம் மற்றும் மின்விசிறியில் தம்பதி இருவரும் தூக்கில் தொங்கியபடி இருந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகளைத் தனியே தவிக்க விட்டு விட்டு தம்பதிகள் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் பரவியதால், ஊர் பொதுமக்கள் சம்பவம் நடந்த வீட்டின் முன்பு குவிந்தனர்.

வெங்கமேடு போலீஸார் விசாரணை

தகவலறிந்த வெங்கமேடு போலீஸார், விரைந்து வந்து தற்கொலை செய்த இருவரது சடலத்தையும் கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொந்த ஊரை விட்டு பஞ்சமாதேவி கிராமத்தில் குடியேறிய 10 நாட்களுக்குள் தம்பதியர் இருவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம்... மூளையாக செயல்பட்ட லலித் ஜா கைது!

இன்று சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

x