சமூக ஊடகங்களால் வந்த வில்லங்கம்:  சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் கைது


புனே: கல்லூரியில் படிக்கும் 16 வயது சிறுமியை சமூக வலைதளங்களில் நட்பாக்கி பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

புனே கல்லூரியில் படிக்கும் 16 வயது சிறுமிக்கு சமூக வலைதளங்கள் மூலம் தனித்தனியாக 4 பேர் அறிமுகமானார்கள். ஆனால் அவர்களுக்கு ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் தெரியாது. இதனையடுத்து இவர்கள் 4 பேரும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், அந்த சிறுமியை நகரின் வெவ்வேறு இடங்களுக்கு தனித்தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர்.

சமீபத்தில் கல்லூரியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான கூட்டத்தின் போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த கலந்துரையாடலின் போது, ​​ஒரு மாணவி தனது தோழியான இந்த சிறுமி அனுபவிக்கும் சோதனைகள் குறித்து ஆலோசகர்களிடம் கூறினார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதுகுறித்து காவல்துறை தரப்பில், "குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு எதிராக நாங்கள் வழக்குப் பதிவு செய்துள்ளோம். அவர்களில் இருவர் சிறார்கள் (வயது வெளியிடப்படவில்லை), அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீது பிஎன்எஸ் பிரிவுகள் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நபர்களால் சிறுமியின் வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் ஐடி சட்டமும் பயன்படுத்தப்பட்டுள்ளது” கூறினார்கள்.

x