கும்பகோணத்தில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது


கும்பகோணம்: கும்பகோணத்தில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர்கள் உள்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள காவிரி புதுப் பாலத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக, கிழக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீஸார், அந்த இடத்திற்குச் சென்றபோது. அங்கு சந்தேகிக்கும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்துள்ளனர். அவர்களைப் பிடித்து விசாரித்த போது, அவர்கள் கும்பகோணம் அரசுக் கல்லூரி மாணவர்களான முத்து பிள்ளை மண்டபத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் (20) மற்றும் முல்லை நகரைச் சேர்ந்த கோபால் (என்கிற) சந்திரகாசு(19) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, விற்பனைக்காக அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சா பொட்டலங்கள், இருசக்கர வாகனம், 2 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீஸார், அவர்கள் இருவருக்கும் கஞ்சா விற்பனையில் உதவியாக இருந்த முல்லை நகரைச் சேர்ந்த விமல் ராஜ் என்பவரையும் (24) கைது செய்து கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

x