கோவை: கோவை வீரகேரளம் அருகே, பொங்காளியூர் கிராமத்தில் தண்டுமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதில் இருந்த காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து, கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில், வடவள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இரு தினங்களுக்கு முன்னர், லாலி சாலையில் உள்ள சங்கிலி கருப்பராயன் கோயில், கல்வீரம்பாளையத்தில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில், ஐயப்பன் கோயில் ஆகியவற்றிலும் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
பி.என்.புதூர் நேதாஜி சாலையில் உள்ள விநாயகர் கோயில் உண்டியலை நேற்று முன்தினம் 2 பேர் உடைக்க முயன்றபோது, கோயில் நிர்வாகிகள் பிடிக்க முயன்றனர். ஆனால் இருவரும் தப்பிவிட்டனர். இதுதொடர்பாக, கோயில் நிர்வாக உறுப்பினர் தங்கராஜ் அளித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.