ஒடிசாவில் காதல் தோல்வி காரணமாக கல்லூரி மாணவி ஒருவர் உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தின் கோடிண்டா காவல் எல்லைக்குட்பட்ட பெட்னி கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கத். இவர் சூரத்தில் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் அனிதா கவுட், தாயுடன் தனியாக பெட்னி கிராமத்தில் வசித்து வந்தார். இவர் அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து வீட்டில் இருந்துள்ளார்.
தாய் விவசாயத்திற்கு சென்ற நிலையில், தனியாக இருந்த அனிதா மோட்டாருக்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தனக்கு தானே நெருப்பு வைத்துள்ளார். அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கப்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்துள்ளனர். அதற்குள் தீ அனிதாவின் உடல் முழுவதும் பரவியது.
இதனையடுத்த போலீஸாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அனிதாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வி காரணமாக அனிதா இந்த முடிவு எடுத்தாகக் கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Rajinikanth| பெயர் தந்த ஏ.வி.எம்.ராஜன்... குற்றவுணர்ச்சிக்குத் தள்ளிய அந்த சம்பவம்!