பயங்கரம்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!


கொல்லப்பட்ட பசுக்கள்

ஹாசனில் சட்டவிரோதமாக இயங்கிய மாட்டிறைச்சி கூடத்தை போலீஸார் சோதனை நடத்தியதில் 60 பசுமாடுகள் கொல்லப்பட்டது தெரிய வந்தது. அங்கிருந்து 26 கன்றுக்குட்டிகளும், 10,000 கிலோ இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஹாசன் மாவட்டம்

கர்நாடகா மாநிலம்,ஹாசன் மாவட்டத்தில் சென்ன சன்னராயப்பட்டணாவில் உள்ள பாகூர் சாலையில் சட்டவிரோதமாக மாட்டிறைச்சி கூடம் இயங்குவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இத்துடன் கொல்லப்படும் மாடுகளின் ரத்தம் ஏரியில் விடப்படுவதாகவும் புகார் எழுந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கன்றுக்குட்டிகள்

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த இடத்தை போலீஸார் சுற்றி வளைத்து சோதனை செய்தனர். அப்போது அங்கு மாட்டிறைச்சிக்காக 60-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் கொல்லப்பட்டது தெரிய வந்தது. அங்கிருந்த 10,000 கிலோ இறைச்சியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அங்கு போலீஸார் வருவதைக் கண்டதும், மாடுகளை அறுத்துக் கொண்டிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். ஒரே நாளில் சன்னராயப்பட்டினத்தில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 26 சிந்தி கன்றுகளை மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

x