தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்


உத்தரப் பிரதேசம்: புலந்த்ஷாஹரில் தனது 60 வயது தாயை பாலியல் வன்கொடுமை செய்த 38 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி அந்த நபர் தனது தாயை பாலியல் வன்கொடுமை செய்தார், அவரது சகோதரர் போலீஸில் இதுகுறித்து புகார் செய்தார்.

புலந்த்ஷாஹரில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு 60 வயதான பெண் ஒருவர், தனது மகன் தன்னை வயலுக்கு அழைத்துச் சென்று, வாயைக் கட்டி பாலியல் செய்ததாக காவல்துறையில் புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரில் "நான் கைகளைக் கூப்பி கெஞ்சினேன், ஆனால் அவன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தான். நான் ஒரு வயதான பெண் என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். பின்னர் சுயநினைவை இழந்துவிட்டேன், நினைவு திரும்பியதும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவன் மிரட்டினான்” என்று தெரிவித்தார். அவரின் மற்றொரு மகன் இந்த புகாரை போலீஸிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக போலீஸார் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இந்த வழக்கில் விரைவு நீதிமன்றம் தற்போது குற்றவாளிக்கு தண்டனை விதித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.51,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று புலந்த்ஷாஹர் ஊரக போலீஸ் தலைவர் ரோஹித் மிஸ்ரா கூறினார்.

அரசு வழக்கறிஞர் விஜய் குமார் ஷர்மா, “இது போன்ற ஒரு வழக்கை தனது வாழ்க்கையில் சந்தித்ததில்லை. "என் மகன் என்னை பலாத்காரம் செய்தான்" என்று அம்மா அழுது கொண்டே இருந்தார். அந்த நபர் தனது தாயை வயலில் தீவனம் எடுக்க அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்" என்று அவர் கூறினார்.

பாலியல் வன்கொடுமை தவிர, கிரிமினல் மிரட்டலுக்காகவும் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டு சிறைத் தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

x