காங்கிரஸ் கூட்டத்தில் அடிதடி... பெண் செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்!


கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டத்தில் பெண் செய்தியாளர் மீது தாக்குதல்

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் செய்தியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், பெண் செய்தியாளர் தாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் பெங்களூரு புறநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் சகோதரர், டி கே சுரேஷ் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். இன்று அவர் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். ஏராளமாக தொண்டர்களுடன் பிரம்மாண்ட பேரணியாக சென்ற டி.கே சுரேஷ் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக டி.கே.சிவக்குமார் மற்றும் டி.கே.சுரேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 50-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மேடையின் அருகே காத்திருந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, வாக்குவாதம் உருவானது. செய்தியாளர் ஒருவர் அங்கு செய்தி சேகரிப்பதற்காக நின்றிருந்த பிடிஐ பெண் செய்தியாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கன்னத்தில் அறைந்ததோடு அடுத்தடுத்து தாக்கவும் செய்தார்.

பெண் செய்தியாளரை தாக்கிய நபரை கண்டித்த காங்கிரஸ் கட்சியினர்

இதைக் கண்டு அருகில் இருந்த சக செய்தியாளர்கள் மற்றும் கூடியிருந்த காங்கிரஸ் கட்சியினர் இருவரையும் தடுத்து நிறுத்தினர். மேலும் பெண் செய்தியாளரை தாக்கிய சக செய்தியாளரையும் கடுமையாக கண்டித்தனர். இதனிடையே இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் எனவும் சட்ட ரீதியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் செய்தியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

x