டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைதான கவிதாவுக்கு ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீடித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜர்படுத்து வதற்காக இன்று நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட கவிதா, “ இது பண மோசடி வழக்கு இல்லை... அரசியல் மோசடி வழக்கு” என கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரும் (பிஆர்எஸ்), தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவின் மகளான கவிதாவை, கடந்த 15-ம் அமலாக்கத்துறை கைது செய்தது. அவரை அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்தது நீதிமன்றம். 7 நாள் விசாரணைக்குப் பின் 23-ம் தேதி கவிதாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, அவரியம் விசாரணை நடத்த மேலும் 5 நாட்கள் அவகாசம் கேட்டது. அதற்கு நீதிமன்றம் 3 நாட்கள் அவகாசம் வழங்கியது.
இந்நிலையில் அமலாக்கத்துறையின் 3 நாள் கஸ்டடி விசாரணை இன்றோடு நிறைவடைந்ததால் கவிதாவை டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, “இது பண மோசடி வழக்கு இல்லை... அரசியல் மோசடி வழக்கு” என கவிதா ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.
இந்த நிலையில் கவிதாவை ஏப்ரல் 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி காவேரி பாவேஜா உத்தரவிட்டார். இதையடுத்து கவிதா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, "இது என் மீது புனையப்பட்ட சட்டவிரோதமான வழக்கு. இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொண்டு வெற்றி பெறுவோம்" என்றார்.
இதையும் வாசிக்கலாமே...
தூத்துக்குடியில் கதறியழுத மூதாட்டி... கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்!
எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!
அனல் பறக்கும் தூத்துக்குடி... இன்று ஒரே நாளில் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
தேச தந்தையை பாதுகாக்க நன்கொடை தந்தை என்ன செய்வார்? பாஜக மீது காங்கிரஸ் தாக்கு
அநியாயம் பண்ணாதீங்க...விஜய் ரசிகர்களிடம் கதறிய இயக்குநர் வெங்கட்பிரபு!