பணி நேரத்தில் பொது இடத்தில் மது அருந்திய சேவூர் தலைமைக் காவலர் சஸ்பெண்ட்


அவிநாசி: சேவூர் அருகே பணி நேரத்தில் பொது இடத்தில் மது அருந்திய தலைமை காவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமை காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அவிநாசி வட்டம் சேவூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் செல்லகண்ணு (38). இவரது நண்பர்களான சேவூரை சேர்ந்த அருண்குமார்(31) மற்றும் தண்டுக்காரம்பாளையத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (31) ஆகியோர் ஆவர். இவர்கள் 3 பேரும் சேவூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பொது இடத்தில் வைத்து மது அருந்தி உள்ளனர். அதிலும் தலைமை காவலர் செல்லகண்ணு, பணி நேரத்தில் பொது இடத்தில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செல்லகண்ணு, அருண்குமார் மற்றும் தினேஷ்குமார் மீது சேவூர் போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இந்நிலையில், செல்லகண்ணு பணிநேரத்தில் பொது இடத்தில் வைத்து மது அருந்தியதால், இன்று அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

x