பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!


கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

டிசம்பர் 6ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதி இடிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படுவது வழக்கம்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தீவிர சோதனை

இதன் ஒரு பகுதியாக கோவை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் ரயில்வே போலீஸார் மற்றும் கோவை மாநகர போலீஸார் மோப்ப நாய்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் போலீஸார் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை

இதே போல் நாளை கோவையில் கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், வணிகப் பகுதிகள் ஆகியவற்றில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


அரசியல் செய்யாதீங்க விஷால்... பதிலடி கொடுத்த மேயர் பிரியா!

x