கதவைத் திறந்து வைத்து தூங்கிய சின்னத்திரை நடிகர்:ரூ.1.5லட்சம் பொருட்கள் திருட்டு!


ஜெயச்சந்திரன்

சென்னையில் வீட்டின் கதவைத் திறந்து வைத்து தூங்கிய சின்னத்திரை நடிகரின் வீட்டில் இருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயச்சந்திரன்

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கலக்கப் போவது யாரு சீசன்-9' என்ற காமெடி நிகழ்ச்சியில் வெற்றிப் பெற்று பிரபலமானவர் நடிகர் ஜெயச்சந்திரன் (48). இவர் சென்னை வடபழனி அழகர் பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகிறார். மேலும் இவர் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு ஜெயச்சந்திரன் வீட்டு கதவை திறந்து வைத்து வீட்டு தூங்கியுள்ளார். அப்போது உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டிலிருந்த 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான லேப்டாப் மற்றும் செல்போனை‌ திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்த ஜெயச்சந்திரன் வீட்டில் இருந்து லேப்டாப், செல்போன் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இச்சம்பவம் குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேகே நகரில் வசித்து வந்த நடிகர் ஜெயச்சந்திரன் கடந்த 6 நாட்களுக்கு முன்பு தான் வடபழனிக்கு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


HBD Napoleon| திரையில் வில்லன்... நிஜத்தில் ஹீரோ!

பரபரப்பு... முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கேஜ்ரிவால்?

x