'கடவுளே என்னை மன்னித்து விடு'... பவ்யமாக மன்னிப்புக் கேட்டு விட்டு கோயிலில் திருடிய திருடன்... வைரலாகும் வீடியோ!


கோயிலில் திருடும் கோபேஷ் சர்மா(

கோயிலில் திருடுவதற்கு முன்னிப்பு கடவுளிடம் மன்னிப்பு கேட்டு பணம், வெள்ளி ஆபரணங்களை ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அல்வார் மாவட்டம்

ராஜஸ்தான் மாநிலம், அல்வார் மாவட்டம் ஆதர்ஷ் நகரில் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராக்களை கோயில் ஊழியர்கள் நேற்று இரவு பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், பயபக்தியுடன் கடவுளிடம் வழிபாடு நடத்தி விட்டு ஒருவர், கோயில் காணிக்கைப் பெட்டியில் இருந்து பணம், ஆபரணங்களைத் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவில், கோயிலுக்குள் வரும் அந்த நபரின் பார்வை காணிக்கைப் பெட்டி மீது விழுகிறது. உடனே அவர் மகிழ்ச்சியில், கடவுளின் முன் கைகளை நீட்டி வழிபட ஆரம்பிக்கிறார். இதன் பின் காணிக்கைப் பெட்டியில் கையை உள்ளே விட்டு பணம், வெள்ளி ஆபரணங்கள் ஆகியவற்றைத் திருடி பையில் வைத்து விட்டு வெளியேறி விடுகிறார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர், போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வீடியோவை பார்த்த போது, கோயிலில் பயபக்தியாக திருடியவர் கோபேஷ் சர்மா(37) என்பதும், அவர் கோயில்களைக் குறிவைத்து திருடும் வழக்கமுடையவர், இரவு நேரங்களில் கோயில் கதவுகளை கடைத்து கடவுளுக்குப் படைக்கப்பட்ட பணம், ஆபரணங்களைத் திருடுவார் என்றும் போலீஸார் கூறினர்.

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து கோபேஷ் சர்மா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர். கோயிலில் பயபக்தியுடன் திருடும் திருடனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

“இரட்டை இலை எனக்கே கிடைக்கணும் முருகா'!... திருச்செந்தூரில் ஓபிஎஸ் மனமுருகி பிரார்த்தனை!

x