சேலத்தில் சாலையில் ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்த மனிதத் தலையைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணத்திலிருந்து பேளூர் செல்லும் சாலையில் குள்ளம்பட்டி என்ற பகுதியில் சாலையின் நடுவே ரத்த வெள்ளத்தில் மனிதத் தலை கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.
இதுகுறித்து உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் மனிதத் தலையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் வேறு ஏதேனும் உடல் பாகங்கள் கிடக்கிறதா என்ற சந்தேகத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, சம்பவ இடத்திற்கு அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், அந்த நபர் ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளி என்பதும், அவர் காட்டூர் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பதும் தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வந்த அவர், இந்த கொலையைச் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
இதனையடுத்து, திருமலை கொலை செய்த நபர் யார், எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபரின் உடல் பேளூர் சாலையில் உள்ள அக்ரஹாரம் ஏரியில் கிடப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. நடுரோட்டில் மனிதத் தலை கிடந்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பகீர்... தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை... சீனாவில் வேகமெடுக்கும் புதிய வகை நோய்!
கனமழை... பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!
தொழிலதிபரைக் கடத்திய 2 பேர் என்கவுன்டர்!
சென்னை, திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை: நீதிமன்றம் அதிரடி!