பகீர்... 31 துண்டுகளாக வெட்டிப் புதைக்கப்பட்ட பட்டியலின பெண்: கணவன், மனைவி கைது!


பெண்ணின் உடல் மீட்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் 21 வயது பட்டியலினப் பெண்ணை 31 துண்டுகளாக வெட்டி காட்டில் புதைத்த தம்பதியினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் நகரங்பூர் மாவட்டம் முருமதிஹி கிராமத்தில் வசித்து வந்த 21 வயதான பட்டியலினப் பெண் திலாபாய் கடந்த புதன்கிழமை முதல் மாயமாகி விட்டதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இதன் பெயரில் பாப்பாடஹண்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முருமதிஹி வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் வெட்டப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

கொலை

அங்கு சென்ற போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், பெண் ஒருவரின் உடல் 31 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த பெண் மாயமான திலாபாய் என்பது தெரியவந்தது.

இதையடுத்து திலாபாயின் உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திலாபாயை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த சந்திரராட் மற்றும் அவரது மனைவி ஷியா என்பது தெரியவந்தது.

திலாபாயை கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள தம்பதி

சந்திர ராட்டுக்கும், திலாபாய்க்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த புதன்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய திலாபாய், சந்திர ராட்டின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது அங்கு அவரது மனைவி ஷியாவும் இருந்துள்ளார்.

இதனால் சந்திரராட் அவரை திருமணம் செய்ய முடியாது எனக் கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும் இனி தான் வீட்டுக்கு செல்ல போவதில்லை எனவும் சந்திர ராட்டின் வீட்டிலேயே இருக்கப் போவதாகவும், திலாபாய் கூறியதால் அதிர்ச்சி அடைந்த இருவரும், ஆத்திரத்தில் கூர்மையான கத்தியால் திலாபாயை தாக்கியுள்ளனர்.

இதில் அவர் உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்ற தம்பதிகள் இருவரும் சந்தேகம் வராமல் இருக்க 31 துண்டுகளாக வெட்டி புதைத்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் கைது செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

x