ஐஐடி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!


ஐஐடி

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மார்ச் 31-ம் தேதி ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பேராசிரியர் ஆசிஷ்குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சச்சின் குமார் ஜெயின்

ஏப்ரல் மாதம் ஆராய்ச்சி மாணவர் சச்சின் குமார் ஜெயின், சென்னை ஐஐடி மெட்ராஸ் வளாகத்திற்குள் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதற்கு பேராசிரியர் ஆதித்யா சென் தான் காரணம் என்று மாணவர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது பேராசிரியர் ஆசிஸ் ஆஷிஷ் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐஐடி மெட்ராஸ் மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் பணி இடைநீக்கத்தில் உள்ளதாக மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

x