முதுகில் மகளைக் கட்டிக் கொண்டு ஆற்றில் குதித்து தாய் தற்கொலை: குடும்பத்தகராறில் விபரீதம்!


தற்கொலை

தஞ்சாவூரில் குடும்பத்தகராறு காரணமாக, மகளை துப்பட்டாவால் உடலில் கட்டிக்கொண்டு, தாய் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகே தெக்கூர் கிராமத்தில் உள்ள கல்லணை கால்வாயில் இரண்டு பெண்களின் சடலங்கள் மிதந்து வருவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், அந்த இரண்டு உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

தஞ்சை கல்லணை

விசாரணையில் உயிரிழந்தவர்கள் தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த பத்மஜோதி மற்றும் அவரது 13 வயது மகள் என்பது தெரியவந்தது. போலீஸாரின் தொடர் விசாரணையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த பத்மஜோதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மகளைத் துப்பட்டாவால் தனது உடலுடன் கட்டிக்கொண்டு இருவரும் கல்லணையில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தஞ்சை கல்லணை

இது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய், மகள் ஆற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x