அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீது தாக்குதல்: ‘மதுஅடிமை’ நோயாளி வெறிச்செயல்


தெலங்கானா: செகந்திராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் மருத்துவரை தாக்கிய மது அடிமை நோயாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

செகந்திராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவரை நோயாளி ஒருவர் தாக்கியுள்ளார். சிகிச்சையின் போது மருத்துவரின் கையைப் பிடித்து தாக்கியதுடன், அவரது ஏப்ரனை இழுத்து துன்புறுத்தியுள்ளார். அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் உடனடியாக தலையிட்டு மருத்துவரை மீட்டனர். இச்சம்பவம் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செகந்திராபாத் அரசு காந்தி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுனில் குமார் கூறுகையில், “பன்சிலால்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ் என்ற நோயாளி வலிப்பு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, ​​திடீரென ஆக்ரோஷமடைந்த பிரகாஷ், பெண் மருத்துவரின் கையை பிடித்து தாக்க முயன்றார். அவரது ஆக்ரோஷமான நடத்தைக்கு நாள்பட்ட குடிப்பழக்க காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டு, தாக்கியவர் கைது செய்யப்பட்டார்” என்று கூறினார்

மேலும், மருத்துவமனையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் மற்றும் காவலர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

x