பழச்சாறில் சிறுநீர் கலந்து விற்பனை: கடைக்காரருக்கு தர்ம அடி!


கோப்பு படம்

உத்தரப் பிரதேசம்: காஜியாபாத்தில் வாடிக்கையாளர்களுக்கு பழச்சாறில் சிறுநீரை கலந்து கொடுத்த கடைக்காரர் கடுமையாக தாக்கப்பட்டார். அதன்பின்னர் போலீஸார் ஜூஸ் கடை உரிமையாளர் அமீர்கான் மற்றும் அவரின் உதவியாளரை கைது செய்தனர்.

காஜியாபாத்தில் உள்ள குஷி ஜூஸ் கடை உரிமையாளர் அமீர்கான் நேற்று பழச்சாறுடன் மஞ்சள் நிற திரவத்தை கலக்கியதை சிலர் கவனித்தனர். அது சிறுநீர் என தெரிய வந்ததால், ஏராளமானோர் திரண்டு சென்று கடை உரிமையாளரை கடுமையாக தாக்கினர்.

இதனையடுத்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஜூஸ் கடையில் சோதனை நடத்தி சிறுநீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் கேனை மீட்டனர்.

இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி பாஸ்கர் வர்மா கூறுகையில், “செப்டம்பர் 13 ம் தேதி தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கடையில் சோதனையிட்டனர். கடையில் இருந்து ஒரு கேனில் இருந்து 1 லிட்டர் சந்தேகத்திற்குரிய சிறுநீர் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கடைக்காரர் அமீர்கானை கைது செய்துள்ளோம். அவர்மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலின் பின்னணியில் உள்ள நோக்கத்தை கண்டறிய முயற்சித்து வருகிறோம்" என்று கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், தெலங்கானாவில் குல்பி விற்பனையாளர் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டதாகவும், ஃபலூடாவில் விந்தணுவை கலந்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இப்போது ஜூஸில் சிறுநீர் கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

x