கோவையில் அதிர்ச்சி: வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் - இருவர் கைது


கோவை: கோவை மாநகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில், வெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக மாநகர காவல்துறை உயரதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார்கள்வந்தன. அதைத் தொடர்ந்து பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், அதில் தொடர்புடையவர்களை பிடிக்கவும் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

அதன்படி, நியூசித்தாபுதூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கடந்த 3-ம் தேதி காட்டூர் காவல்துறையினர் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், பாலியல் தொழிலுக்கு ஆண்களை அழைத்த இரண்டு பெண் தரகர்களான கோவையைச் சேர்ந்தராஜம்(36), சத்யா(34) ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சிக்கந்தர் பாதுஷா(31),ஸ்டீபன்ராஜ்(32) ஆகியோரை கடந்த 7-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இதில்கும்பலின் தலைவராக சிக்கந்தர்பாதுஷாசெயல்பட்டது தெரிந்தது.

இதுகுறித்து மாநகர காவல்துறையின், வடக்குப் பிரிவு துணைஆணையர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஒரு கும்பல் ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களை விமானத்தில் அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர். இக்கும்பலின் முக்கியநபராக தேனியைச் சேர்ந்தசிக்கந்தர் பாதுஷா செயல்பட்டுள்ளார். உடந்தையாக கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் இருந்துள்ளார்.

இவர்களின் வாட்ஸ்அப் குழுவில் நாடு முழுவதும் 117 தரகர்கள் இருந்துள்ளனர். இவர்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பெண்களை அனுப்பி பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். இப்பெண்களை நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட 15 பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு கார், 13 செல்போன்கள்,ஏராளமான சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களின்வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகிறோம்.

சிக்கந்தர் பாதுஷா மீது கோவையில் 13 வழக்குகள் உள்ளன. 2021-ம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த இவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவர்களுக்கு உடந்தையாக இருந்த கபீர் சிங் என்பவரையும், இவர்களுடன் தொடர்பில் இருந்த தரகர்களையும் பிடிக்க விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

x