குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீஸாரை தாக்கிய கும்பல்... பரபர சிசிடிவி காட்சிகள்!


போலீஸார் மீது தாக்குதல்

டெல்லியில் குற்றவாளிகளை பிடிக்க சென்ற இடத்தில் போலீஸார் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி, மோகன் கார்டன் காவல் நிலைய போலீஸார் நேற்று இரவு குற்றவாளி ஒருவரைப் பிடிப்பதற்காக, ரகுவீர் நகர் பகுதிக்குச் சென்றனர். அப்போது, அந்தக் குற்றவாளியின் ஆதரவாளர்கள், அப்பகுதியினர் திடீரென் அங்கு திரண்டனர்.மேலும், அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி, போலீஸாருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு, மோதல் ஏற்பட்டது. அப்போது ஆண்களும் பெண்களுமாகச் சேர்ந்து போலீஸாரை இழுத்துச் சென்று தாக்கினர்.

கைது

இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தாக்குதலில் 3 போலீஸார் காயமடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் ரஜோரி கார்டன், திலக் நகர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கூட்டத்தை கலைத்தனர். பின்னர், அங்கு சிக்கியிருந்த மோகன் கார்டன் போலீஸாரை மீட்டனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!

x