சென்னையில் நடுரோட்டில் பரபரப்பு... சப்-இன்ஸ்பெக்டர்கள் கட்டிப் புரண்டு சண்டை!


சென்னையில் நடுரோட்டில் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இரண்டு பேர் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்மந்தப்பட்ட இரு உதவி ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து கூடுதல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கொத்தவால் சாவடியில் போக்குவரத்து பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை கொத்தவால் சாவடி லோன் ஸ்கொயர் பகுதியில் இரண்டு போக்குவரத்து காவலர்களுடன் சேர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன் போக்குவரத்து விதிகளை மீறி சென்ற வாகனங்களை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் பிரபு, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரு போக்குவரத்து காவலர்களை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.‌

உடனே சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், பிரபுவிடம் அவர்கள் இங்கு வேலை செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களை எதற்காக கூடுப்பிடுகிறாய் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பிரபு வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் இருவரையும் அழைத்து விசாரணை நடத்தியதுடன் அவர்களை அமைந்தக்கரை மற்றும் அண்ணாநகர் போக்குவரத்து பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இரு போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் நடுரோட்டில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகைக்கு பாலியல் தொல்லை... சர்ச்சையில் இயக்குநர் சீனு ராமசாமி!

x