விடுதியில் தங்கியிருந்த சுற்றுலா வந்த பெண்ணை ஜன்னல் வழியாக ஊழியர் ஒருவர் ரகசியமாக புகைப்படம், வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.
கேரளாவுக்கு தம்பதி ஒன்று சுற்றுலா சென்று உள்ளது. அப்போது அங்குள்ள விடுதியில் இந்த தம்பதியினர் தங்கி இருக்கின்றனர். இதனிடையே, விடுதியில் இருந்த பெண்ணை ஒருவர் ஜன்னல் வழியாக ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்திருக்கிறார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், இது குறித்து தனது கணவரிடம் கூறி இருக்கிறார். இதைத் தொடர்ந்து அந்த வாலிபரை பிடித்த கணவர், வீடியோ மற்றும் புகைப்படத்தை அழித்திருக்கிறார்.
இதன் பினன்ர் ரகசியமாக வீடியோ, புகைப்படம் எடுத்த அந்த வாலிபர் விடுதியில் வேலை பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த வாலிபரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் பெண் ஒருவரை விடுதி ஊழியரே ரகசியமாக புகைப்படம் வீடியோ எடுத்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.