அதிர்ச்சி! ஜூஸ் தாமதத்தால் சூறையாடப்பட்ட கடை... இளைஞர்கள் அட்டகாசம்


ஜூஸ் கொண்டுவர தாமதமானதால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கடையின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய அதிர்ச்சி சம்பவம் திருப்பூரில் நடந்துள்ளது.

திருப்பூர், சேரங்காடு பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் சிடிசி கார்னர் பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று இரவு இரண்டு இளைஞர்கள் ஜூஸ் குடிக்க வந்துள்ளனர். ஜூஸ் கொடுக்க தாமதம் ஆகி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்கிருந்த ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசினர். இதையடுத்து அந்த வாலிபர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.

ஒரு கட்டத்தில் கடையின் கண்ணாடியை இளைஞர்கள் அடித்து நொறுக்கினர். இது குறித்து கடையின் உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். அதற்குள் அந்த இரண்டு இளைஞர்களும் அங்கிருந்து தம்பி ஓடிவிட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர்.

x