தனியார் மருத்துவமனை ஒன்றில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக இருந்த இளம்பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், மங்களுரூவைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம்(37). இவர் நண்பருடன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதனால் அவர்கள் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிக்கி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது விபத்தில் காயமடைந்த தனது சகோதரரைப் பார்க்க இளம்பெண் ஒருவர், தனது மாற்றுத்திறனாளி மகளுடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார்.
இதன்பின்னர் மருத்துவமனையில் இருந்த ஷர்மிளா பானு(27) என்பவரிடம் சிறுமியை ஒப்படைத்து விட்டு கடைக்குச் சென்றார். அப்போது ஷர்மிளா பானுவின் உதவியோடு சிறுமியை மருத்துவமனையில் வைத்தே ஒரு அறையில் அப்துல் ஹக்கீம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், மங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் அப்துல் ஹக்கீம், ஷர்மிளா பானு ஆகிய இருவரையும் போலீஸார் இன்று கைது செய்தனர். மருத்துவமனையில் மாற்றுத்திறனாளி சிறுமியை பெண் ஒருவர் உதவியுடன் வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.