தேனியில் பரபரப்பு; தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் மீது போக்சோ வழக்கு!


போக்சோ சட்டத்தில் வாலிபர் மீது வழக்கு

தேனியில் 16 வயது தங்கையிடம் தவறாக நடந்துக் கொண்டு கர்ப்பமாக்கிய பெரியப்பா மகன் மீது போலீஸார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. 10வது வரை பயின்றுள்ள இவர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சிங் டிப்ளமோ படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது பெரியப்பா மகனான 27 வயது சகோதரர் பழகியுள்ளார்.

வெல்டிங் வேலை செய்து வரும் அந்த வாலிபர் தனக்கு அந்த சிறுமி தங்கை உறவு முறை என தெரிந்தும் அவரிடம் தவறாக நடந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமான நிலையில், சிறுமியை ஏமாற்றி விட்டு தலைமறைவாகி உள்ளார். இந்நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து அந்த சிறுமி, தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், அண்ணன் முறை கொண்ட அந்த வெல்டிங் தொழிலாளி மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அண்ணன் முறை கொண்ட வாலிபரே தங்கையான சிறுமியை ஏமாற்றி கர்ப்பமடைய செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x