நாடோடி பழங்குடி இனப் பெண் அஸ்வினி கைது!


நரிக்குறவர் இனப் அஸ்வினி

கடந்தாண்டு தீபாவளியையொட்டி சமூக வலைத்தளத்தில் வீடியோ மூலம் வைரலான நரிக்குறவர் பெண் அஸ்வினி வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அவர் வீட்டிற்கே சென்று கோரிக்கைகளை நிறைவேற்றினார்.

இந்நிலையில், நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினி மீது பல விமர்சனங்களும் சர்ச்சைகளும் இருந்து வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் சிலர் அஸ்வினி தங்களை மிரட்டுவதாக புகார் தெரிவித்து வந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த, விஜி என்பவரின் மனைவி நதியா என்பவருக்கும் அஸ்வினிக்கும் முன்பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும், வாய் தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியதில், கையில் வைத்திருந்த பேனா கத்தி மூலம், அஸ்வினி நதியாவை குத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நதியா மாமல்லபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அஸ்வினியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x