ராஜஸ்தானைச் சேர்ந்த 35 வயது பெண் தனது கணவர், இரண்டு குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு காதலருடன் குவைத்திற்குத் தப்பிச் சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ். இவரது மனைவி தீபிகா படிதார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். மும்பையில் பணியாற்றும் முகேஷ், தனது மனைவி தீபிகாவை காணவில்லை என கட ந்த ஜூலை 15-ம் தேதி சித்ரி காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரித்த போது தரப்பில், குஜராத் ஹிம்மத் நகரில் வசிக்கும் இர்பான் ஹைதரை சந்திக்க தீபிகா அடிக்கடி கேத் பிரம்மாவுக்கு பயணம்செய்தது தெரிய வந்தது. இந்நிலையில், தீபிகாவை அழைத்துக்கொண்டு ஹைதர் குவைத்திற்குத் தப்பிச் சென்று விட்டதாக சித்ரி காவல் நிலைய அதிகாரி கோவிந்த சிங் கூறினார்.
இதையடுத்து படிதார் சமூகம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். இந்த நிலையில், பர்தா அணிந்திருந்த தீபிகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தனது மனைவியை இர்பான் இஸ்லாம் மதத்தை தழுவும்படி தூண்டியதாக முகேஷ் புகார் கூறியுள்ளார். தீபிகா, ஹைதரைச் சந்தித்தது மற்றும் குவைத்துக்கு விசா கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர், 2 குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு காதலனுடன் குவைத்திற்கு பெண் தப்பிச் சென்ற விவகாரம் ராஜஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.