ஆந்திராவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த விரைவு ரயில்களில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் நகை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி அடுத்தடுத்து வந்து கொண்டிருந்த 2 விரைவு ரயில்களில் கத்தியை காட்டி மிரட்டி பயணிகளிடம் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லூர் அருகே சிங்கராயகொண்டா – காவாலி ரயில் நிலையங்களுக்கு இடையே கேட்ச் நம்பர் எஸ் 5,6,7,8 உள்ளிட்டவையில் 6 பேர் கொண்ட கும்பல் பயணிகளை கத்தியைக் காட்டி மிரட்டி நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் ரயிலில் உள்ள அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை பாதியில் நிறுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது. இதே போல சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ஐதராபாத் விரைவு ரயில் மற்றும் சார்மினார் விரைவு ரயிலில் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ரயில்வே போலீஸார், தடயங்களை சேகரித்து குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.