அதிர்ச்சி... குழந்தைகள் கண் முன்பே மனைவியைக் கொன்ற கணவன்!


மனைவியைக் கொன்ற கணவன் கைது

இன்ஸ்டாகிராமில் தனது மனைவியை அதிகம் பேர் பின்தொடர்வதால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் குழந்தைகள் முன்னிலையில், மனைசியின் கழுத்தை நெரித்து தொழிலதிபர் ஒருவர் கொலை செய்த சம்பவம் லக்னோவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த 37 வயதான தொழிலதிபருக்கு திருமணமாகி 12 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர். இவரது மனைவி இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக செயல்பட்டுள்ளார். இதனால் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தனது மனைவியின் இன்ஸ்டா கணக்கை அவரது கணவர் முடக்கியுள்ளார். இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் தகராறு இருந்து வந்தது. அத்துடன் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்குத் தெரியாமல் யாரிடமோ மனைவி பழகுகிறாரோ என்ற சந்தேகமும் தொழிலதிபருக்கு இருந்து வந்தது.

இந்நிலையில் பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தொழிலதிபரின் கார் நேற்று நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் விரைந்து சென்றனர். பூட்டப்பட்ட காருக்குள் தொழிலதிபர் அழுது கொண்டிருந்தார். அருகில் அவரது மனைவி இறந்து கிடந்தார். அவர் அருகில் அவரது 2 குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது காரில் வரும் போது தனது தாய்க்கும், தந்தைக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த தந்தை, தாயின் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டதாக 12 வயது மகள் போலீஸாரிடம் கூறினார். இதையடுத்து கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், தொழிலதிபரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலைக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தான் பிரச்சினையா வேறு ஏதும் பிரச்சினையா என தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் லக்னோவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x