சித்தகங்கா மடத்தின் திருவிழாவிற்கு வந்த 17 வயது சிறுமியை மிரட்டி மூன்று பேர் கூடடுப் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் சித்தகங்கா மடம் உள்ளது. இங்கு நடைபெற்ற திருவிழாவிற்காக 17 வயது சிறுமி தனது ஆண் நண்பருடன் நேற்று முன்தினம் வந்திருந்தார். அப்போது அங்கிருந்த மலையில் ஆண் நண்பருடன் அவர் அமர்ந்திருந்த போது அவரை சிலர் வீடியோ எடுத்துள்ளனர். அந்த வீடியோவைக் காட்டி சமூக வலைதளங்களில் வைரலாக்கி விடுவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் சிறுமி பயந்து போனார்.
அப்போது சிறுமியை ஒரு பைக்கில் வலுக்கட்டாயமாக ஏற்றி பந்தேபால்யாவில் உள்ள ஒரு வீட்டின் அறையில் வைத்து 3 வியாபாரிகளும் கூட்டுப் பலாத்காரம் செய்தனர். இதன் பிறகு அவரை பைக்கில் ஏற்றி மடத்திற்கு வெளியே கொண்டு வந்து விட்டுச் சென்றனர். தனக்கு நடந்த கொடுமையை தனது ஆண் நண்பரிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார். இதுதொடர்பாக தும்கூர் மகளிர் காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார்.
இதுகுறித்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பந்தேபால்யாவைச் சேர்ந்த அமோகா, ஹனுமந்தா மற்றும் பிரதாப் ஆகிய 3 பேரை இன்று கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வராக கூறினார்.
திருவிழாவிற்கு வந்த சிறுமி மூன்று பேரால் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தும்கூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!
ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!
பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!
ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?
அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!