‘நான் அந்த மாதிரி கிடையாது...’ திடீரென 2வது மாடியிலிருந்து குதித்த மாணவன்!


ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்

மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயதான ஸ்வப்னோதீப் குண்டு, விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் "நான் தன்பாலின ஈர்ப்பாளர் அல்ல" என்று பலமுறை கூறினார்.

மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் வங்க மொழியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்த நாடியா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்காலியைச் சேர்ந்த ஸ்வப்னோதீப் குண்டு புதன்கிழமை நள்ளிரவு விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

பலத்த சத்தம் கேட்டு மாணவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது, ஸ்வப்னோதீப் நிர்வாண நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். சிகிச்சைக்காக கேபிசி மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மாடியிலிருந்து குதிப்பதற்கு முன்பு குண்டு தனது சக மாணவர்களிடம் "நான் தன்பாலின ஈர்ப்பாளன் அல்ல" என்று கூறினார் என்பது தெரிய வந்துள்ளது. குண்டு மரணம் தொடர்பாக முன்னாள் மாணவர் ஒருவரை கொல்கத்தா போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சௌரப் சௌத்ரி 2022ல் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் எம்எஸ்சி முடித்தவர். ஆனால் அவர் தொடர்ந்து பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்தார். விசாரணையின் போது, சௌரப் சவுத்ரி ராகிங் சம்பவத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புக் கொண்டார்.

x