சிசிடிவி கேமிரா உடைப்பு... கொல்லிமலை கோயிலில் உண்டியல், எல்இடியைத் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்!


மாசி பெரியண்ணன் சாமி கோயில்

மாசி பெரியண்ணன் சாமி கோயிலில் சிசிடிவி கேமிராக்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு கோயிலின் உண்டியலையும், அங்கு சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த எல்இடி தொலைக்காட்சி பெட்டியையும், மர்ம நபர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற மாசி பெரியண்ணன் சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள சாமியே கொல்லிமலையின் காவல் தெய்வமாக விளங்கி வருவதாக அப்பகுதி மக்கள் நம்பி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி இரவு மர்ம நபர்கள் சில பெரியண்ணன் சாமி கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அவர்கள் கருவறைக்கு முன்னர் வைக்கப்பட்டிந்த இரும்பு பெட்டி உண்டியலை தூக்கி சென்றனர்.

மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை அடித்து உடைத்து சேதப்படுத்திவிட்டு, கோயிலின் உள்ளே சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த எல்இடி தொலைக்காட்சி, கேமிரா உள்ளிட்டவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கொல்லிமலை வாழவந்தி நாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

x