ஷாக்... பிறந்த நாள் கொண்டாட வீட்டிற்கு அழைத்த காதலி: நம்பிச் சென்ற காதலன் அடித்துக் கொலை!


கொலை செய்யப்பட்ட மாணவர் அபிஷேக்

காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கலபுர்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கலபுர்கி

கர்நாடகா மாநிலம், கலபுர்கியைச் சேர்ந்தவர் அபிஷேக்(19). இவர் பிஎஸ்சி நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வசித்த குடியிருப்பைச் சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். அவர்கள் இருவரும் அடிக்கடி போனிலும், நேரிலும் பேசிக் கொண்டனர். அத்துடன் இரவு முழுவதும் வாட்ஸ் அப் உரையாடலையும் நடத்தி வந்துள்ளனர்.

இந்த விஷயம் அந்த சிறுமியின் குடும்பத்திற்குத் தெரிய வந்தது. இதனால் அந்த சிறுமியை மட்டுமின்றி அபிஷேக்கையும் எச்சரித்துள்ளனர். ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் அபிஷேக்கை கொலை செய்ய சிறுமியின் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதற்கு அந்த சிறுமியையே பயன்படுத்துவதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்தனர்.

அதாவது, அந்த சிறுமிக்கு மார்ச் 3-ம் தேதி பிறந்த நாள் என்றும், அதற்காக வீட்டுக்கு வர வேண்டும் என்று அபிஷேக்கை அழைக்கச் சொல்லியுள்ளனர். பிறந்த நாள் இல்லாத நாளில் பொய் சொல்லி என்னால் அபிஷேக்கை அழைக்க முடியாது என்று அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அவரை மிரட்டி அபிஷேக்கிற்கு போன் செய்ய வைத்துள்ளனர்.

இதனால் தனது காதலியின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடலாம் என்று ஆசையுடன் அபிஷேக் வந்துள்ளார். ஆனால், அவர் வீட்டுக்குள் வந்ததும் இரும்புக்கம்பி, தடியால் சிறுமியின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அப்போது தனது குடும்பத்தினரின் காலில் விழுந்து அபிஷேக்கை விட்டுவிடச்சொல்லி அந்த சிறுமி கெஞ்சியுள்ளார். அவரை காதலிக்கமாட்டேன், இனி பேசமாட்டேன் என்று கதறி அழுதுள்ளார். ஆனால், அதைக் கேட்கும் எண்ணத்தில் அவரது குடும்பத்தினர் இல்லை. அபிஷேக்கை அடித்து ரத்த வெள்ளத்தில் புதரில் வீசினர்.

இந்த நிலையில், அவ்வழியே சென்ற ஒருவர், விபத்தில் ஒருவர் அடிபட்டுக் கிடப்பதாக நினைத்து அபிஷேக்கை, ஜிம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அபிஷேக் நேற்று உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போது, அபிஷேக் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கொலை செய்ததாக பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார், அபிஷேக்கை காதலித்த சிறுமி உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அனில் ரத்தோட் (42), சந்தோஷ் ரத்தோட் (34), சாகர் ஜாதவ் (27), ஹேமந்த் ரத்தோட் (34) ஆகியோரை இன்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கலபுர்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

x