பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், அதிமுக பிரமுகருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் எட்டாம் வகுப்பு மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், அதிமுக பிரமுகர் சிகாமணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பிரமுகர் சிகாமணிக்கு வழங்கப்பட்டிருந்த நிபந்தனை ஜாமீனை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து, சரணடைய உத்தரவிட்டது.
ஆனால், சிகாமணி சரணடையாமல் தலைமறைவானார். இதையடுத்து, சிகாமணிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.